IPL 2021 #DCvsKKR 2வது தகுதிச்சுற்று போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..? முன்னாள் வீரர் அதிரடி ஆருடம்

By karthikeyan VFirst Published Oct 13, 2021, 4:40 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்த போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வெற்றி பெற்ற கேகேஆர் அணியும், முதல் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த டெல்லி கேபிடள்ஸும் இன்று நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன. எலிமினேட்டரில் தோற்ற ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறியது.

கேகேஆர் - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான இன்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும். ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளுக்கான, ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் டாம் கரனுக்கு பதிலாக, முழு ஃபிட்னெஸுடன் இருந்தால் மார்கஸ் ஸ்டோய்னிஸையோ அல்லது ரிப்பல்  படேலையோ ஆடவைக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், டாம் கரன்/மார்கஸ் ஸ்டோய்னிஸ்/ரிப்பல் படேல், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை என்பதால், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.

இந்த போட்டியில் கேகேஆர் அணி தான் வெற்றி பெறும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

click me!