ஐபிஎல்லில் அசத்திய DC மற்றும் KKR அணி வீரர்கள் இருவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்..!

By karthikeyan VFirst Published Oct 13, 2021, 5:10 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் அபாரமாக விளையாடிய டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் மற்றும் கேகேஆர் அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டரும் மிதவேகப்பந்து வீச்சாளருமான வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 24ம் தேதி எதிர்கொள்கிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசிய பவுலர்கள், டி20 உலக கோப்பைக்கான நெட் பவுலர்களாக எடுக்கப்பட்டுவருகின்றனர்.

அந்தவகையில் இந்த சீசனில், குறிப்பாக டி20 உலக கோப்பை நடக்கவுள்ள அமீரகத்தில் அருமையாக பந்துவீசிய பவுலர்கள், இந்திய அணியின் டி20 பவுலர்களாக அப்படியே அமீரகத்திலேயே தங்கவைக்கப்படுகின்றனர்.

சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசிய மேலும் 2 பேர் நெட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - IPL 2021 தம்பி நீ பண்ணதுலாம் போதும் கிளம்புப்பா; டெல்லி அணியில் ஒரு மாற்றம்! DC - KKR அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே மிகச்சிறப்பாகவும் ஸ்மார்ட்டாகவும் பந்துவீசி டெல்லி கேபிடள்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஆவேஷ் கான் நெட் பவுலராக எடுக்கப்பட்டுள்ளார். 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆவேஷ் கான், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் ஹர்ஷல் படேலுக்கு(32விக்கெட்) அடுத்து 2வது இடத்தில் உள்ளார்.

அதேபோல கேகேஆர் அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் சிறந்த மிதவேகப்பந்து வீச்சாளருமான வெங்கடேஷ் ஐயரும் நெட் பவுலராக எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 14வது சீசனின் அமீரக பாகத்தில் கேகேஆர் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக அருமையாக விளையாடி 265 ரன்களை குவித்து,கேகேஆர் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழும் வெங்கடேஷ் ஐயர், சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது ஸ்மார்ட்டான பவுலிங் அமீரக ஆடுகளங்களில் எடுபடுவதால், அவரது பவுலிங்கை வலைப்பயிற்சியில் எதிர்கொள்வது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும் என்பதால், வெங்கடேஷ் ஐயர் நெட் பவுலராக எடுக்கப்பட்டுள்ளார்.
 

click me!