வச்சா குடுமி எடுத்தா மொட்டை.. என்னப்பா ஆடுற நீ? கோலி, ஏபிடியை பாருப்பா தம்பி! இளம் வீரரை செமயா விளாசிய கம்பீர்

By karthikeyan VFirst Published Apr 23, 2021, 8:28 PM IST
Highlights

சஞ்சு சாம்சன் மில்லியன் டாலர் பேபியாக ஆரம்பித்து, அதன்பின்னர் படுமோசமாக சொதப்புகிறார் என்று கம்பீர் விமர்சித்துள்ளார்.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். நீண்டகாலமாகவே ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவரும் சஞ்சு சாம்சன், இந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். 

இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எல்லா சீசன்களிலுமே முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடிவிட்டு அதன்பின்னர் அந்த சீசன் முழுவதுமே சொதப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள சஞ்சு சாம்சன், இந்த சீசனிலும் அதையே செய்கிறார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 222 ரன்கள் என்ற கடின  இலக்கை விரட்டும்போது தனி நபராக சதமடித்து 119 ரன்களை குவித்த சஞ்சு சாம்சன், அதன்பின்னர் 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்ப, கேப்டன் சஞ்சு சாம்சனும் 21 ரன்னுக்கே வெளியேறினார். சஞ்சு சாம்சன் ஒவ்வொரு சீசனிலும் முதல் போட்டியில் மட்டும் நன்றாக ஆடிவிட்டு அதன்பின்னர் அந்த சீசன் முழுவதும் சொதப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள சஞ்சு சாம்சனை,  கவாஸ்கர் விளாசிய நிலையில், கவுதம் கம்பீரும் விமர்சித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் குறித்து பேசிய கம்பீர், சஞ்சு சாம்சன் மில்லியன் டாலர் பேபியாக தொடங்குகிறார். பின்னர் போகப்போக படுமோசமாக சொதப்புகிறார். அவர் சீசனை தொடங்குவதை பார்க்கும்போது 800-900 ரன்கள் அடித்துவிடுவார் போல என்று எண்ணத்தோன்றும்.

சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.  உங்கள் கெரியர் கிராஃப் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு பேலன்ஸ் இருக்க வேண்டும். ஒரு சதமடித்து விட்டு, அதன்பின்னர் சொதப்பாமல் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும். டிவில்லியர்ஸ், கோலியை பாருங்கள். ஒரு சதமடித்தால், அடுத்த போட்டியில் 40 ரன் அடிப்பார்கள்.

ஆனால் சஞ்சு சாம்சன், ஒரு சதமடிப்பார்; அதன்பின்னர் அடிக்கவே மாட்டார். அவர் அடுத்து ஒரு சதம் கூட அடிக்கலாம். ஆனால் அது ஒரு தரமான, உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுக்கு அடையாளம் கிடையாது. எனவே தொடர்ச்சியாக அணிக்கு பங்களிப்பு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!