#PBKSvsMI தமிழனை கழட்டிவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி..! மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

Published : Apr 23, 2021, 07:18 PM IST
#PBKSvsMI தமிழனை கழட்டிவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி..! மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் முருகன் அஷ்வின் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கெய்ல், பூரன், தீபக் ஹூடா, மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக்கான், ஃபேபியன் ஆலன், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ், போல்ட், பும்ரா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?