புதிய பிளான் போட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்!

By Rsiva kumar  |  First Published Aug 8, 2023, 1:16 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த பிரையன் லாராவிற்குப் பதிலாக அணி நிர்வாகம் டேனியல் வெட்டோரியை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில், ஒரு முறை மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியனாகியுள்ளது. அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சீசனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு முறை கூட ஹைதராபாத் அணி டிராபியை கைப்பற்றவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணி 14 போட்டிகளில் விளையாடி 4ல் மட்டுமே வெற்றி பெற்று, கடைசி இடம் பிடித்தது.

WI vs IND 3rd T20: பதிலடி கொடுக்குமா இந்தியா? ஒரு தொடரை கூட கைப்பற்றாத வெ.இ, வரலாற்றை மாற்றுமா?

Tap to resize

Latest Videos

ஒவ்வொரு போட்டி நடக்கும் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதன்மை நிர்வாக அதிகாரியான காவ்யா மாறனின் ரியாக்‌ஷன் மீடியா கவனத்தை ஈர்த்து ரசிகர்களை விமர்சிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. இதனை குறிப்பிட்டு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மோசமான ஃபார்மை வெளிப்படுத்தும் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பா?

வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், அணியின் பயிற்சியாளரான பிரையன் லாராவை அணி நிர்வாகம் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதே போன்று ஏராளமான மாற்றங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி செய்து வருவதாக கூறப்பட்டது.

Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?

நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4ல் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அதுமட்டுமின்றி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் விளையாடி 13 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டு, 29 போட்டிகளில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்துள்ளது.

கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

இந்த சீசனில் புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் அணிக்கு மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு மாற்றத்தையும் அவர் கொண்டு வரவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் பிளே ஆஃப் சுற்றில் விளையாடிய ஹைதராபாத் அணி அடுத்த 3 ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

ஹைதராபாத் அணியில் முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின், பிரையன் லாரா என்று முன்னாள் ஜாம்பவான்கள் இருந்தும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக பயிற்சியாளரை மாற்றும் முயற்சியில் ஹைதராபாத் நிர்வாகம் களமிறங்கியது. கடந்த ஆண்டு டாம் மூடி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிரையன் லாரா நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது அவரை மாற்ற அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.

இந்த நிலையில், தான் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேனியர் வெட்டோரியை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மினி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில், அதில், டேனியல் விட்டோரி, ஹைதராபாத் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!