கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்!

By Rsiva kumar  |  First Published Jul 5, 2023, 12:04 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் இருவரும் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.


உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள லப்ரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார். இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பிடித்து, இந்திய அணிக்காக விளையாடினார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளும், 68 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் கார் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பாக்பத் சாலையில் உள்ள முல்தான் நகர் பகுதியில் வசித்து வரும் பிரவீன் குமார் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் தனது லேண்ட் ரோவர் டிஃபென்டர் வாகனத்தில் பாண்டவ் நகரிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மீரட்டில் உள்ள கமிஷனர் குடியிருப்பு அருகில் வந்த போது அவரது கார் மீது கேண்டர் (கனரக வாகனம்) மோதியது. இதில், பிரவீன் குமாரின் கார் கண்ணாடியானது சுக்குநூராக நொறுங்கிப் போனது.

பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!

எனினும், இந்த விபத்தில் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சிவில் லைன் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கேண்டர் வாகன ஓட்டுநரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

உலகக் கோப்பைக்கான கடைசி இடம் யாருக்கு? இந்தியாவுடன் மோதும் அணி நெதர்லாந்தா? ஸ்காட்லாந்தா?

பிரவீன் குமார் கார் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, கடந்த 2007 ஆம் ஆண்டு மீரட்டில் தனது சொந்த ஊர் திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பின் போது, ​​முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் திறந்த ஜீப்பில் இருந்து கீழே விழுந்தார் எனினும், அதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

click me!