கோலியின் கெரியர் முடிவதற்குள் கண்டிப்பாக அந்த சாதனையை படைத்தே தீருவார்! உறுதியாக நம்பும் முன்னாள் பயிற்சியாளர்

By karthikeyan VFirst Published Jul 5, 2021, 10:16 PM IST
Highlights

விராட் கோலி அதிக சர்வதேச போட்டிகளுக்கு கேப்டன்சி செய்தவர் என்ற வரலாற்று சாதனையுடன் தான் கெரியரை முடிப்பார் என்று சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அணியாக கோலோச்சிவருகிறது.

விராட் கோலியும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துவருகிறார். உலகம் முழுதும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்துவருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலகம் முழுதும் வெற்றிகளை குவித்துவருகிறது. ஆஸி., மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள விராட் கோலி, 34 வெற்றிகள் மற்றும் 14 தோல்விகளை அவரது கேப்டன்சியில் பெற்றுள்ளார். அவரது வெற்றி விகிதம் 70.43. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை அதிக போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் கோலி.

2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற கோலி, இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். தோனி இந்திய அணியை 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். இந்நிலையில், விராட் கோலி அவரது கெரியர் முடிவதற்குள் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி செய்த கேப்டன் என்ற சாதனையுடன் தான் முடிப்பார் என்று சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு அந்த லிஸ்ட்டில் 6ம் இடத்தில் இருக்கிறார் கோலி. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித் தான் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி செய்துள்ளார். க்ரேம் ஸ்மித் 109 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!