#SLvsIND இலங்கை தொடரில் அந்த இளம் வீரர் அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

Published : Jul 05, 2021, 09:12 PM IST
#SLvsIND இலங்கை தொடரில் அந்த இளம் வீரர் அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான தொடரில் அனைத்து போட்டிகளிலும் பிரித்வி ஷா ஆடவேண்டும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.  

விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய மெயின் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. 

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருந்ததால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் புவனேஷ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.

இந்த தொடரை சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இந்த இலங்கை தொடரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். 

இந்நிலையில், இந்த தொடரில் ஆடும் இளம் வீரர் பிரித்வி ஷா குறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், இலங்கைக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷா 6 போட்டிகளிலும் ஆடவேண்டும். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது டி20 தொடரிலும் அவர் கண்டிப்பாக ஆடவேண்டும். பிரித்வி ஷாவின் திறமையில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

அனைத்துவிதமான போட்டிகளுக்குமான இந்திய அணியில் பிரித்வி ஷா மீண்டும் கம்பேக் கொடுக்க இந்த தொடர் ஒரு அருமையான வாய்ப்பு என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!