ஆஸி, வீரர் மேத்யூ ஹைடன் தேர்வு செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு!

Published : Aug 27, 2023, 09:29 AM ISTUpdated : Aug 27, 2023, 09:31 AM IST
ஆஸி, வீரர் மேத்யூ ஹைடன் தேர்வு செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு!

சுருக்கம்

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் தேர்வு செய்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 38 நாட்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை வரும் 5 ஆம் தேதிக்குள்ளாக தேர்வு செய்தாக வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருக்கிறது. உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால் இந்தியா ஜெயிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மா தான் அதிக ரன்கள் குவிப்பார் – விரேந்திர சேவாக்!

வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 17 பேர் கொண்ட இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னாள் வீரர்களும் அணியை தேர்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அணியை பட்டியலிட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்த கங்குலி: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை!

அதன்படி, ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கேஎல்  ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராகத்தான் இடம் பெற்றிருக்கிறார். அப்படியிருக்கும் போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத இலங்கை கிரிக்கெட்டர் வணிந்து ஹசரங்கா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!