வரலாற்றை மாற்றி எழுதிய மஞ்சள் பாய்ஸ் – ஹோம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

By Rsiva kumarFirst Published Mar 27, 2024, 10:12 AM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இதுவரையில் சிஎஸ்கே வெற்றி பெறவே இல்லை என்பதை இன்று சிஎஸ்கே வீரர்கள் மாற்றி எழுதி வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. இதில் ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்கள், ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தனர். கடைசியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.

MS Dhoni, IPL 2024: வயசு நம்பர் தானு நிரூபித்த தோனி – டைவ் அடித்து கேட்ச் பிடிக்க கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

பின்னர், 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தீபக் சாகர் வீசிய பந்து விருத்திமான் சகா ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அடுத்த பந்திலேயே சகா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 12 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 12 ரன்கள் மட்டுமே அடித்து டேரில் மிட்செல் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

MS Dhoni Wait for Batting: மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த ஆசிரியர் தோனி!

இதையடுத்து வந்த டேவிட் மில்லர் 21 ரன்களில் வெளியேற, அஸ்மதுல்லா உமர்சாய் 11, ராகுல் திவேதியா 6, ரஷீத் கான் 1 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக வீரர் சாய் சுதர்சன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். ஆனால், அவர், 31 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. குஜராத் அணியை பொறுத்த வரையில் மொத்தமே 3 சிக்ஸர் மட்டுமே அடித்தது.

சேப்பாக்கத்தில் உருவான துபே புயலால் சிஎஸ்கே கொட்டிய சிக்ஸர், பவுண்டரி மழை – ஜிடிக்கு 207 ரன்கள் இலக்கு!

டெஸ்ட் கிரிக்கெட்டை விட மோசமாக விளையாடி இந்தப் போட்டியில் குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே ஹோம் மைதானத்தில் 2ஆவது வெற்றியை பெற்றுள்ளது. அதோடு, இதுவரையில் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மஞ்சள் பாய்ஸ் மாற்றி எழுதியுள்ளனர்.

ரூ.1.80 கோடிக்கு ஒர்த்தா? சேப்பாக்கத்தில் 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 நிரூபித்து காட்டிய ரச்சின் ரவீந்திரா!

இந்த போட்டி உள்பட இரு அணிகளும் மோதிய 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேரில் மிட்செல் மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

click me!