#INDvsENG சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் மேட்ச் பார்க்கலாம்..! ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்

Published : Feb 01, 2021, 03:56 PM IST
#INDvsENG சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் மேட்ச் பார்க்கலாம்..! ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்

சுருக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியை காண ஐம்பது சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது. 4 டெஸ்ட்டில் முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் ஐந்தாம் தேதி தொடங்கவுள்ளது. அந்த டெஸ்ட் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் அதே சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியை காண ஐம்பது சதவிகித ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளை காணவும் ஐம்பது சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!
Vaibhav Suryavanshi: அறிமுகப் போட்டியிலேயே இப்படியா? அயர்லாந்து ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதில் சிக்கல்? ரசிகர்கள் ஷாக்!