11 ஆண்டுக்கு பிறகு கம்பேக்.. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய பாகிஸ்தான் வீரரின் பகீர் செயல்

Published : Aug 13, 2020, 10:41 PM IST
11 ஆண்டுக்கு பிறகு கம்பேக்.. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய பாகிஸ்தான் வீரரின் பகீர் செயல்

சுருக்கம்

11 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்பை தட்டி தூக்காமல் தவறவிட்டார் ஃபவாத் ஆலம்.  

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி, 120 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் ஷதாப் கானை நீக்கிவிட்டு, பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும் விதமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்த்தது. அந்தவகையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றார் ஃபவாத் ஆலம். 2009ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஃபவாத் ஆலம், அதே ஆண்டில் மேலும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். அதன்பின்னர் 11 ஆண்டுகளாக அவரை டெஸ்ட் அணியில் எடுக்கவேயில்லை. 

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் தான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார். ஆனால், தனக்கு கிடைத்த கம்பேக் சான்ஸை படுமோசமாக பங்கம் செய்துவிட்டார் ஃபவாத் ஆலம். இதுமாதிரியான கம்பேக் வாய்ப்புகள் அரிதினும் அரிதாகத்தான் கிடைக்கும். ஆனால் இரு கைகளையும் தாங்கி, நறுக்குனு பற்றிக்கொள்வதை விடுத்து, வீணடித்தது மட்டுமல்லாது டக் அவுட்டாகி அதிர்ச்சியும் அளித்தார் ஃபவாத் ஆலம். 

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத், இன்னிங்ஸின் 3வது ஓவரிலேயே ஒரு ரன்னில் நடையை கட்ட, கேப்டன் அசார் அலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரர் அபித் அலி 60 ரன்களில் ஆட்டமிழக்க, ஆசாத் ஷாஃபிக் 5 ரன்னில் பிராடின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்து பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்த ஃபவாத் ஆலம், வெறும் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நான்காவது பந்தில் சாம் கரனின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினார். 

மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டத்தில் பாதி ஆட்டம் பாதிக்கப்பட்டது. 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் அடித்துள்ளது பாகிஸ்தான் அணி. பாபர் அசாம் 25 ரன்களுடனும் முகமது ரிஸ்வான் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?