இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக டிரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய அணியின் மெயின் ஸ்பான்ஸருக்கான டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணியின் ஜெர்சி ஸ்பானஸராக ஓப்போ, வீவோ உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்து வந்தன. அதன் பிறகு பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருந்து வந்தது. இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.5.5 கோடி வரையில் வருமானம் வந்தது. ஆனால், ஐசிசி தொடர்களில் வருமானம் என்னவோ ரூ.1.7 கோடியாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு இந்திய அணியின் ஜெர்சியில் ஸ்பான்ஸர்களி லோகோ இடம் பெறுவதில் பல விதிமுறைகள் உள்ளன.
ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!
ஆதலால், வருமானம் குறைந்தது. எனினும் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் வரையில் இருந்தது. ஆனால், வருமானம் பாதிப்பு காரணமாக ஒப்பந்தத்தை மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டது. இதையடுத்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்சியில் ஸ்பான்ஸர் லோகோ இல்லாமல் களமிறங்கியது. மாறாக அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் ஜூன் மாதம் முதல் தொடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அடிடாஸ் நிறுவனத்தின் புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது.
இந்த நிலையில் தான் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மார்ச் மாதம் முடிந்த நிலையில், ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனை ஃபேண்டஸி கேமிங் ஆப் செயலி நிறுவனமான டிரீம் லெவன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து பிசிசிஐ முறையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- முதலைமைச்சர் கோப்பை அறிமுகம்: நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே இலக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Dream11 will be the jersey sponsor for the Indian Team till 2027. [] pic.twitter.com/J5TlvpqUWp
— Johns. (@CricCrazyJohns)