
உலகக்கேப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. இதில், நேட் சிவர் ப்ரூன்ட் 81 ரன்களும், வியாட் 59 ரன்களும், எமி ஜோன்ஸ் 47 ரன்களும் எடுத்தனர்.
செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா கார் மீது தாக்குதல்..! போலீஸார் வழக்குப்பதிவு
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து 114 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தான் சாதனையாக இருந்தது.
தவறாக நடந்து கொண்டதாக நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு: பிருத்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு!
குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மகளிர் அணியினர் பலப்பரீட்சனை நடத்துகின்றன. நாளை நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியினர் மோதுகின்றனர்.
சும்மாவே இருந்த ஆஷ்டன் அகர் அணியிலிருந்து விடுவிப்பு!