#INDvsENG 2வது ஒருநாள் போட்டி: ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரர் ரிஷப் பண்ட்..! இந்திய அணி முதலில் பேட்டிங்

Published : Mar 26, 2021, 01:33 PM ISTUpdated : Mar 26, 2021, 01:34 PM IST
#INDvsENG 2வது ஒருநாள் போட்டி: ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரர் ரிஷப் பண்ட்..! இந்திய அணி முதலில் பேட்டிங்

சுருக்கம்

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடக்கிறது.

ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் ஆடுகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் மாலன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மோர்கன் ஆடாததால் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்துகிறார்.

சாம் பில்லிங்ஸ் காயம் காரணமாக ஆடாததால், அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோனும், மார்க் உட்டுக்கு பதிலாக ரீஸ் டாப்ளியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லிவிங்ஸ்டோன், சாம் கரன், மொயின் அலி, டாம் கரன், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.

இந்திய அணியில் காயம் காரணமாக ஆடமுடியாமல் போன ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!