#INDvsENG 2வது ஒருநாள்: இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Mar 25, 2021, 10:18 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி மார்ச் 26ம் தேதி நடக்கிறது.

ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, 2வது ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து ஆடும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஒயின் மோர்கன், காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

2வது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முதல் ஒருநாள் போட்டியின்போது, மோர்கனின் கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு இடையே காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமடையாததால் கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக டேவிட் மாலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மோர்கன் ஆடாததால், ஜோஸ் பட்லர் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தவுள்ளார்.  சாம் பில்லிங்ஸும் 2வது போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் வாய்ப்பு பெறுகிறார்.

அதேபோல ஃபாஸ்ட் பவுலர் டாம் கரனுக்கு பதிலாக இடது கை ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளி வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது கை ஃபாஸ்ட் பவுலரான ரீஸ் டாப்ளி, ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு நல்ல கலவையை தருவார் என்பதுடன், ஸ்விங்கும் செய்யக்கூடிய பவுலர் ஆவார்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், மொயின் அலி, லிவிங்ஸ்டோன், ரீஸ் டாப்ளி, அடில் ரஷீத், மார்க் உட்.
 

click me!