#IPL2021 போன சீசனில் ரெய்னா.. இந்த சீசனில் ஜடேஜா..! ரசிகர்கள் தலையில் இடியாய் இறங்கிய ஜடேஜா குறித்த தகவல்

By karthikeyan VFirst Published Mar 25, 2021, 8:32 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசன் நெருங்கும் நிலையில், ஜடேஜா குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை என்று சிஎஸ்கே சி.இ.ஒ காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கும் தகவல் ரசிகர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
 

சிஎஸ்கே அணியின் முக்கியமான தூண்களே தோனி, ரெய்னா, ஜடேஜா தான். சிஎஸ்கே அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றதற்கு முக்கியமான இவர்கள் மூவரும், இனிமேல் கோப்பையை வெல்லவும் முக்கியம்.

இந்நிலையில், கடந்த சீசனில் சிஎஸ்கேவில் ரெய்னா ஆடாததன் தாக்கத்தை பார்த்தோம். படுமோசமாக சொதப்பி, ஐபிஎல்லில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு செல்லாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது சிஎஸ்கே.

எனவே இந்த சீசனில் கம்பேக் கொடுத்து 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே, முதல் அணியாக பயிற்சியை தொடங்கியது. தோனி, ராயுடு உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். வரும் 27ம் தேதி முதல் மும்பையில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

ஐபிஎல் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், ஜடேஜா குறித்த அப்டேட் இதுவரை இல்லை என்று சிஎஸ்கே சி.இ.ஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3வது டெஸ்ட்டில் காயமடைந்த ஜடேஜா, 4வது டெஸ்ட்டில் ஆடவில்லை. அதன்பின்னர் காயத்திலிருந்து மீளாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களிலும் ஆடவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் பயிற்சியில் இருக்கும் ஜடேஜா, ஐபிஎல்லில் ஆடுவது குறித்த அப்டேட் இதுவரை இல்லை.

சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் 14வது சீசனுக்காக தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஜடேஜா குறித்து பேசிய சிஎஸ்கே சி.இ.ஒ காசி விஸ்வநாதன், உண்மையாகவே ஜடேஜா சிஎஸ்கே அணியில் எப்போது இணைவார் என்று தெரியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை விடுவிக்க வேண்டும். அதன்பின்னர் தான் அவரால் இணைய முடியும் என்று தெரிவித்தார்.

ஜடேஜா ஐபிஎல்லில் ஆடுவது குறித்த அப்டேட் இதுவரை இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.
 

click me!