#INDvsENG எல்லாரும் ஒண்ணு; பேர்ஸ்டோ மட்டும் தனி..! ஜெர்சி குழப்பத்திற்கு என்ன காரணம்..? பேர்ஸ்டோ விளக்கம்

By karthikeyan VFirst Published Mar 25, 2021, 6:37 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவின் ஜெர்சியில் எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்ததற்கான விளக்கமளித்துள்ளார் ஜானி பேர்ஸ்டோ.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 317 ரன்களை குவித்து, இங்கிலாந்தை 251 ரன்களுக்கு சுருட்டி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவும் ஜேசன் ராயும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தும் அந்த அணி படுதோல்வி அடைந்தது. முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 14 ஓவரில் 135 ரன்களை குவித்து கொடுத்தனர். 

குறிப்பாக பேர்ஸ்டோ மிகச்சிறப்பாக ஆடினார். 66 பந்தில் 94 ரன்களை குவித்து 6 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அந்த போட்டியில் சிறப்பாக பேர்ஸ்டோவின் ஜெர்சியில் மட்டும் பெயர், எண் ஆகியவை வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இங்கிலாந்து வீரர்களின் ஒருநாள் ஜெர்சியில் எண், எழுத்துக்கள் எல்லாம் நீல நிறத்தில் தான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் பேர்ஸ்டோவின் ஜெர்சியில் மட்டும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து பேசிய பேர்ஸ்டோ, மிஸ்கம்யூனிகேஷன் தான் காரணம்.  டி20 ஜெர்சியில் வெள்ளை நிறத்தில் எழுதப்படுவதால், குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் ஜெர்சியிலும் அதே நிறத்தில் எழுதப்பட்டுவிட்டது என்று விளக்கமளித்தார் பேர்ஸ்டோ.
 

click me!