ஆர்ப்பாட்டமே இல்லாமல் சைலண்ட்டா சாதனை படைக்கும் ஷிகர் தவான்..! கோலிக்கும் தவானுக்கும் பெரிய வித்தியாசமே இல்ல

By karthikeyan VFirst Published Mar 25, 2021, 7:26 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் சைலண்ட்டாக செம சாதனையை படைக்கப்போகிறார் தவான்.
 

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் இந்திய அணியின் பிரைம் ஓபனராக இருந்த தவான், படிப்படியாக டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இடத்தை இழந்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இந்திய அணியின் முதன்மை தொடக்க வீரராக இருந்துவருகிறார்.

2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றபோது, அந்த தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் தவான் தான். ஆனால் ரோஹித் சர்மாவின் 3 இரட்டை சதங்கள், கோலியின் சதங்கள் ஆகிய சாதனைகளால் தவான் மழுங்கடிக்கப்பட்டார். ஆனால் தவான் சைலண்ட்டாக இந்திய அணிக்காக நல்ல இன்னிங்ஸ்களை ஆடுவதுடன், சொந்த ரெக்கார்டுகளையும் படைத்துவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 98 ரன்களை குவித்த தவான், 2வது ஒருநாள் போட்டியில் 94 ரன்களை குவித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார். இந்த மைல்கல்லை எட்டப்போகும் 10வது இந்திய வீரர் தவான்.

மேலும் அடுத்த போட்டியில் அதை அடித்தால், 138 இன்னிங்ஸ்களில் 6000 ஒருநாள் ரன்களை எட்டிவிடுவார். அதன்மூலம் அதிவேகமாக 6000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கோலி 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். கோலிக்கும் தவானுக்கும் இடையே பெரிய இன்னிங்ஸ் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லாது, அதிவேக 6000 ரன்கள் அடித்த ஆல்டைம் சர்வதேச வீரர்களில் 3வது வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.
 

click me!