#INDvsENG ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு

Published : Mar 25, 2021, 10:07 PM IST
#INDvsENG ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் காயம் காரணமாக விலகியுள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி மார்ச் 26ம் தேதி நடக்கிறது.

ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, 2வது ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து ஆடும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஒயின் மோர்கன், காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியின்போது, மோர்கனின் கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு இடையே காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமடையாததால் கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக டேவிட் மாலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மோர்கன் ஆடாததால், ஜோஸ் பட்லர் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தவுள்ளார்.  சாம் பில்லிங்ஸும் 2வது போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் வாய்ப்பு பெறுகிறார்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!