#INDvsENG கடைசி டி20: இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு..! விராட் கோலியின் செம மூவ்

Published : Mar 20, 2021, 06:55 PM IST
#INDvsENG கடைசி டி20: இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு..! விராட் கோலியின் செம மூவ்

சுருக்கம்

கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போலவே ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளின் முடிவில் 2-2 என தொடர் சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் வழக்கம்போலவே ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் ஃபார்மில் இல்லாத கேஎல் ராகுல் நீக்கப்பட்டு, கூடுதல் பவுலராக டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராகுல் நீக்கப்பட்டதால், ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி தொடக்க வீரராக இறங்குகிறார். இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் ஸ்மார்ட்டான மூவ்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர், டி.நடராஜன்.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இங்கிலாந்து அணி ஆடுகிறது.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!