ஜிம்பாப்வேவை அடி நகட்டி எடுத்த நஜிபுல் ஜட்ரான்..! கடைசி டி20யில் கடின இலக்கை நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

By karthikeyan VFirst Published Mar 20, 2021, 5:34 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.
 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.

ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையேயான கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடந்துவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஃப்கானிஸ்தான் தொடரை வென்றுவிட்டது.

3வது டி20 போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கனி 31 பந்தில் 39 ரன் அடித்து ஆட்டமிழந்தார். 4ம் வரிசையில் இறங்கிய நஜிபுல்லா ஜட்ரான், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ஜட்ரான், 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்களை விளாசினார். ஜட்ரானின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 183 ரன்களை குவித்து, 184 ரன்கள் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்தது ஆஃப்கான் அணி.

ஆஃப்கானிஸ்தான் அணி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், இந்த போட்டியிலும் வென்றால் ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்துவிடும். 
 

click me!