#INDvsENG நெனச்ச மாதிரியே தூக்கியெறியப்பட்ட இந்திய வீரர்..! நடராஜனுக்கு வாய்ப்பு.. இந்தியா முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Mar 28, 2021, 1:44 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற, தொடர் 1-1 என சமனடைந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

புனேவில் நடக்கும் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி தான் டாஸ் வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி எதிர்பார்த்ததை போலவே குல்தீப்பை நீக்கிவிட்டது. குல்தீப்பிற்கு பதிலாக ஸ்பின்னரை சேர்க்காமல் ஃபாஸ்ட் பவுலரான டி.நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணியிலும் எதிர்பார்க்கப்பட்டதை போலவே டாம் கரன் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், மொயின் அலி, மார்க் உட், ரீஸ் டாப்ளி, அடில் ரஷீத்.
 

click me!