Ashes Series: முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி

Published : Dec 05, 2021, 10:25 PM IST
Ashes Series: முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி

சுருக்கம்

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு உலக கோப்பைக்கு நிகரான முக்கியமான தொடர் ஆஷஸ் தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே களத்தில் அனல் பறக்கும். இரு அணிகளுமே ஆஷஸ் தொடரை வெல்ல கடுமையாக போராடும்.

2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த தொடர் டிராவில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2021-2022 ஆஷஸ் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் விவரம் இதோ..

இங்கிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராவ்லி, ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன்.
 

PREV
click me!

Recommended Stories

ஜெயிலில் கம்பி எண்ணிய டாப் 10 கிரிக்கெட் வீரர்கள்! லிஸ்ட்டில் 2 இந்தியர்கள்! பாகிஸ்தானியர்கள் அதிகம்!
Virat Kohli: 'கம்மி விலைக்கு ஷூ தர்றேன், ஆனா...': டெஸ்ட் கம்பேக் வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி