#ENGvsSL முதல் டி20: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்காக ஆடும் ஆல்ரவுண்டர்.! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jun 23, 2021, 8:49 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 

முதல் டி20 போட்டி கார்டிஃபில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கடைசியாக 2019ம் ஆண்டுக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் ஆடுகிறார்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் உட்.
 

click me!