#ICCWTC ஃபைனல்: விராட் கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் செயல்..! பாராட்டு மழையில் நனையும் கிங் கோலி

Published : Jun 23, 2021, 06:20 PM IST
#ICCWTC ஃபைனல்: விராட் கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் செயல்..! பாராட்டு மழையில் நனையும் கிங் கோலி

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விராட் கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் செயல் டுவிட்டரில் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்துவருகிறது.  

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். களத்தில் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமானவர் என்பது நாம் அறிந்ததே.

ஆனால் ஆட்டத்தை பொறுத்தமட்டில் தான் அந்த ஆக்ரோஷமே தவிர, எதிரணி வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் நன்றாக பழகக்கூடியவர்; மதிப்பளிக்கக்கூடியவர்.  அந்தவகையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் ஆறாம் நாள் ஆட்டத்தை தொடங்கும் முன், கோலியின் செய்கை ரசிகர்களின் பாராட்டுகளை குவித்துவருகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடந்துவரும் நிலையில், இதுதான் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங்கின் கடைசி போட்டி. இந்த போட்டியில் இன்றுதான் கடைசி நாள் என்பதால், வாட்லிங் களம் காணும் கடைசி நாள் ஆட்டம் இன்றுதான். நியூசிலாந்துக்காக 12 ஆண்டுகளாக ஆடிவரும் வாட்லிங், அந்த அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இன்றுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கடைசி நாள் என்பதால், களத்திற்கு வந்ததும், ஆட்டம் தொடங்குவதற்கு முன், அவருக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது சில நொடிகள் பேசிக்கொண்டும் இருந்தார்.

வாட்லிங்கிற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், ரசிகர்களின் பாராட்டுகளையும் குவித்துவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா