#ICCWTC ஃபைனல்: ரிஷப் பண்ட் - ஜடேஜா அதிரடி பேட்டிங்.. சரிவிலிருந்து மீளும் இந்தியா

By karthikeyan VFirst Published Jun 23, 2021, 5:43 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரிஷப் பண்ட் - ஜடேஜாவின் அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி சரிவிலிருந்து லேசாக மீண்டுவருகிறது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 249 ரன்கள் அடித்தது.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் மற்றும் 4ம் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதுடன், ஆடிய நாட்களிலும் ஒருசில செசன்கள் பாதிக்கப்பட்டன. அதனால் ரிசர்வ் டே ஆறாம் நாளான இன்று ஆட்டம் தொடர்கிறது. 

32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 5ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ரிசர்வ் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். 

இந்த போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், ஜாமிசனின் பந்தில் கோலி 13 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, கோலியை வீழ்த்திய அடுத்த ஓவரில் புஜாராவையும் வீழ்த்தினார் கைல் ஜாமிசன். புஜாரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே 15 ரன்னில் ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ஆனால் அதன்பின்னர் 2 அதிரடி வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே வேகமாக அடித்து ஆடி ஸ்கோர் செய்ய மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்துள்ளது.

ரிஷப் பண்ட் அதிரடியான பேட்டிங்கின் மூலம் நியூசிலாந்துக்கு லேசான அச்சுறுத்தலை கொடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுவருகிறார். உணவு இடைவேளைக்கு பிறகு, ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும், அதன்பின்னர் அஷ்வினும் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தால் சவாலான இலக்கை நிர்ணயித்து நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய இந்திய அணி முயற்சிக்கும்.
 

click me!