#ICCWTC ஃபைனல்: மேட்ச் டிராவில் முடிந்தால் ஐசிசி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 23, 2021, 3:41 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் டிராவில் முடிந்தால் ஐசிசி என்ன செய்யவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. 2ம் நாள் தான் ஆட்டம் தொடங்கியது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டமும் மழையால் முழுவதுமாக ரத்தானது. இதற்கு இடையிடையேயும் ஆட்டத்தின் ஒருசில செசன்கள் மழையாலும் போதிய வெளிச்சமின்மையாலும் பாதிக்கப்பட்டது.

5ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் எஞ்சிய முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 5ம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ரிசர்வ் டேவான கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடர்ந்துவருகிறது.

இன்றுதான் கடைசி நாள் ஆட்டம் என்பதால் போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி டிராவில் முடிந்தால், கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிப்பதை பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் விரும்பவில்லை. 2019 உலக கோப்பை ஃபைனல் டிரா ஆனபோது, சூப்பர் ஓவரும் டிரா ஆன பின்னர், பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரை தீர்மானித்ததை போல, வெற்றியாளரை தீர்மானிக்க ஏதாவது ஒரு வழியை ஐசிசி முடிவு செய்ய வேண்டும் என்பதே கவாஸ்கரின் கருத்தாகவுள்ளது.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க ஐசிசி கிரிக்கெட் கமிட்டி ஒரு ஃபார்முலாவை கண்டறிய வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!