டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்..!

By karthikeyan VFirst Published Jun 22, 2021, 10:00 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளிலும் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்து, நியூசிலாந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஆடிவருகின்றன. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 249 ரன்கள் அடித்தது. 32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது இந்திய அணி.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒருமுனையில் விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் நங்கூரமிட்டு பொறுமையாக பேட்டிங் ஆடிய கேன் வில்லியம்சன், 177 பந்தில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தால் ஒரு ரன்னில் தவறவிட்டார்.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7178 ரன்களை குவித்துள்ள வில்லியம்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் 7517 ரன்களுடன் ரோஸ் டெய்லர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், 7172 ரன்களுடன் 2ம் இடத்தில் இருந்த ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் கேன் வில்லியம்சன்.

இந்த பட்டியலில் 6453 ரன்களுடன் 4ம் இடத்தில் உள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.
 

click me!