நீ எவ்வளவு நல்லா ஆடினாலும் உனக்கு டீம்ல இடம் கிடையாது.! ஆல்ரவுண்டரை திட்டமிட்டு புறக்கணிக்கும் இங்கிலாந்து அணி

By karthikeyan VFirst Published Aug 28, 2020, 10:56 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியை ஆடும் லெவனில் எடுக்காமல் புறக்கணித்துள்ளது. 
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியை ஆடும் லெவனில் எடுக்காமல் புறக்கணித்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் டேவிட் வில்லி. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான டேவிட் வில்லி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு முந்தைய தொடர் வரை அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பைக்கான அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.

இதையடுத்து ஓராண்டுக்கு பிறகு மீண்டும், அண்மையில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரி இங்கிலாந்து அணியில் எடுக்கப்பட்டார். அந்த தொடரின் முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதிரடியாக ஆடி 47 ரன்களை அடித்தார். அவரது அந்த இன்னிங்ஸ் அணிக்கு உதவிகரமாக இருந்தது. இதையடுத்து கடைசி போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அந்த போட்டியில் 51 ரன்கள் அடித்ததுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி அந்த தொடரை வென்ற நிலையில், அதற்கு முக்கிய காரணமாக டேவிட் வில்லி திகழ்ந்தார். 

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய 2 வகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். டேவிட் வில்லி செம ஃபார்மில் நன்றாக ஆடியதால், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மான்செஸ்டரில் நடக்கும் முதல் டி20 போட்டியில் டேவிட் வில்லி புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

டேவிட் வில்லிக்கு இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதுவரை வெறும் 6 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள பவுலிங் ஆல்ரவுண்டர் லூயிஸ் க்ரெகோரி அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), டாம் பாண்ட்டன், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, டாம் கரன், லூயிஸ் கிரெகோரி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், சாகில் மஹ்மூத்.
 

click me!