டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிங் என்று நிரூபித்த ஜோ ரூட்; 11,000 ரன்களை கடந்து சாதனை!

By Rsiva kumarFirst Published Jun 3, 2023, 9:42 AM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 11 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து முதலில் ஆடியது. இதில், முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குஜராத்தில் உயரமான ஒற்றுமை சிலையை நிறுவ தோனிக்கு அழைப்பு விடுத்த கூடுதல் தலைமைச் செயலாளர்!

அதில் அதிகபட்சமாக ஃபால் ஸ்டிர்லிங் 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 524 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், ஆலி போப் 205 ரன்கள் குவித்தார். பென் டக்கெட் 182 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அறிமுக போட்டியில் வள்ளலான மதீஷா பதிரனா 16 வைடுகள் வீசி சாதனை: ஆப்கானிஸ்தான் எளிய வெற்றி!

இவர்களைத் தொடர்ந்து ஜோ ரூட் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவரது 58ஆவது டெஸ்ட் அரைசதம் ஆகும். இந்தப் போட்டியில் 56 ரன்கள் எடுத்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 11 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 130 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஜோ ரூட் 11,004 ரன்கள் எடுத்துள்ளார்.

Wrestlers கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: 1983ல் உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் உள்ளிட்ட வீரர்கள் அறிக்கை!

 

Double hundred for Ollie Pope.

205* from just 207 balls against Ireland in Lord's, What a knock it has been, total dominance. pic.twitter.com/HNaxu2UFHf

— Johns. (@CricCrazyJohns)

 

விராட் கோலி 8,416 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதே போன்று ஸ்டீவ் ஸ்மித் 8,792 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். கேன் வில்லியம்சன் 8,124 ரனக்ள் எடுத்துள்ளார். இப்படி மாஸ் நட்சத்திர வீரர்கள் யாரும் செய்யாத சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அசால்டாக செய்துள்ளார்.

ஐபிஎல்லில் வெற்றிகரமான டீம் எது? ஜாலியாக சண்டை போட்டுக் கொண்ட பொல்லார்டு, பிராவோ!

 

Joe Root completed 11000 runs in Test cricket.

One of the greatest in Modern Era. pic.twitter.com/Pcz9Uwb7dL

— Johns. (@CricCrazyJohns)

 

click me!