டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை  விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

england beat afghanistan by 5 wickets in t20 world cup

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

பெர்த்தில் நடந்துவரும் அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் ஆடிவருகின்றன.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Latest Videos

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் உட். 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், உஸ்மான் கனி, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி(கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், ஃபரீத் அகமது மாலிக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 
முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜட்ரான் 32 ரன்களும், உஸ்மான் கனி 30 ரன்களும் அடித்தனர். ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி, நஜிபுல்லா ஜட்ரான் ஆகிய வீரர்கள் ஏமாற்றமளித்தனர். ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொற்ப  ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 112 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய சாம் கரன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

113 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி அந்த இலக்கை  அடித்து 5  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image