டி20 உலக கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்ப்போம்.
டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2லிருந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஆனால் க்ரூப் 1ல் தான் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து அணி 3 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளையும், ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளையும், இங்கிலாந்து அணி 3 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
undefined
இந்திய அணி இந்த 2 மாற்றங்களை செய்தே தீரணும்..! ஹர்பஜன் சிங் அதிரடி
நாளை பிரிஸ்பேனில் நடக்கும் முக்கியமான போட்டியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஜெயித்தால் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுமே 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகள் என்ற நிலையில் இருக்கும். 3 அணிகளில் கடைசி போட்டியில் ஜெயிக்கும் 2 அணிகள் அல்லது 3 அணிகளும் கடைசி போட்டியில் ஜெயிக்கும் பட்சத்தில் (இந்த 3 அணிகளுக்கு இடையே அதன்பின்னர் போட்டி இல்லை) நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஒருவேளை நாளைய போட்டியில் நியூசிலாந்து ஜெயித்தால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு வலுவாகும்.
எனவே நாளை பிரிஸ்பேனில் நடக்கும் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான போட்டி மிக முக்கியமான போட்டி. இரு அணிகளுக்குமே முக்கியமான இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.
உத்தேச இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் உட்.