இந்திய அணி இந்த 2 மாற்றங்களை செய்தே தீரணும்..! ஹர்பஜன் சிங் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 31, 2022, 6:17 PM IST
Highlights

டி20 உலக கோப்பை இந்திய அணியின் ஆடும் லெவனில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, சூப்பர் 12 சுற்றின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் சில கேள்விகள் எழுந்துள்ளன. கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாமல் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பியுள்ளார். எனவே அவரை இனியும் அணியில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தபோது காயத்தால் வெளியேறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் எடுத்த அந்த முடிவு சரியானதுதானா? இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஓபன்டாக்

இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்திய அணியில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், இந்திய அணி சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும். கேஎல் ராகுல் கிரேட் பிளேயர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மேட்ச் வின்னரும் கூட. ஆனால் இப்போது தடுமாறிவருகிறார். தினேஷ் கார்த்திக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக காயமடைந்தார். எனவே தினேஷ் கார்த்திக் ஆடவில்லை என்றால், ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்து அவரை ஓபனிங்கில் இறக்கவேண்டும். ரோஹித் சர்மாவுடன் ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக இறக்கினால் இடது - வலது காம்பினேஷன் கிடைக்கும். அது அணிக்கு நல்லது. தீபக் ஹூடாவை அப்படியே அணியில் வைத்துக்கொள்ளலாம். அவர் சில ஓவர்களையும் வீசுவார்.

டி20 உலக கோப்பை: தனி ஒருவனாக ஆஸி.,யை அச்சுறுத்திய டக்கர்..! அயர்லாந்தை வீழ்த்தி 2ம் இடத்திற்கு முன்னேறிய ஆஸி.,

அடுத்ததாக அஷ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலை சேர்க்கவேண்டும். சாஹல் உலகின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர். அஷ்வின் அனுபவத்துக்காக அவரை அணியில் எடுத்திருக்கின்றனர். மேலும் தென்னாப்பிரிக்க அணியில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஒரு நல்ல பவுலர், இடது - வலது என்ற பேதமெல்லாம் இல்லாமல் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் சிறப்பாக வீசுவார். அப்படியான சிறந்த ஸ்பின்னர் தான் சாஹல். ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் 2-3 விக்கெட் வீழ்த்தக்கூடிய பவுலர் சாஹல். விக்கெட் வீழ்த்தக்கூடிய ஸ்பின்னர் தான் தேவை. எனவே அஷ்வினுக்கு பதிலாக சாஹலை சேர்க்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

click me!