
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 நாளை 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இன்று 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நடக்கிறது. உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் இடம் பெற்று 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள், ஒரு இறுதிப் போட்டி என்று மொத்தம் 48 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, கொல்கத்தால், லக்னோ, அகமதாபாத், தர்மசாலா, புனே என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
World Cup Free Tickets: உலகக் கோப்பையில் 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு வழங்க முடிவு!
உலகக் கோப்பைக்கு முன்னதாக 10 அணிகளுக்கும் வார்ம் அப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இந்திய அணிக்கான 2 போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை நடக்க உள்ள முதல் போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து புன்சிரிப்புடன் நடந்து சென்ற இங்கிலாந்து வீரர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து விளையாடிய வங்கதேச அணிக்கு எதிரான வார்ம் அப் 6ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இந்தியாவிற்கு எதிரான 4ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸ் மட்டும் போடப்பட்ட நிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது. ஒரு வெற்றியுடன் இங்கிலாந்து வீரர்கள் நேற்று அகமதாபாத்திற்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
வார்ம் அப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி 2 போட்டியிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்து திருவனந்தபுரத்திலிருந்து அகமதாபாத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இன்று அவர்கள் பயிற்சியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.