ப்ரீ ப்ரீ ப்ரீ….டி20 உலகக் கோப்பை தொடரை இலவசமாக பார்க்கலாம் – ஹாட்ஸ்டார் அறிவிப்பு!

By Rsiva kumarFirst Published Mar 6, 2024, 4:55 PM IST
Highlights

ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரை மொபைல் போனில் இலவசமாக பார்க்கலாம் என்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான 9ஆவது சீசன் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன.

இந்த நிலையில் தான் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு வரும் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து போட்டிகளையும் மொபைல் போனில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டார் பயனர்கள் டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் போட்டிகளை நெட் இல்லாமல் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இலவசமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பு செய்தது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனை ஜியோ நிறுவனம் இலவசமாக ஒளிபரப்பு செய்ய உள்ள நிலையில் ஜூன் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை ஹாட்ஸ்டார் நிறுவனம் இலவசமாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இலவசமாக மொபைல் போனில் பார்க்கலாம்.

ஆனால் ஜியோ சினிமாவில் குளறுபடிகள் இருக்கும் என்பதால், ஹாட்ஸ்டாரில் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஜியோவில் சேவை குறைபாடு உள்ளது. அடிக்கடி லோடு ஆவதால், ரசிகர்கள் பல முறை விமர்சனம் செய்திருக்கின்றனர். ஆனால், ஹாட்ஸ்டாரில் இது போன்ற சேவை பாதிப்பு என்று எதுவும் இல்லாத நிலையில், கிரிக்கெட் போட்டிகளை ஹாட்ஸ்டாரில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் தொடர்களை ஹாட்ஸ்டார் மொபைலில் இலவசமாக ஒளிபரப்பு செய்து வருகிறது.

click me!