சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகான்ஸ் !! 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி !!

By Selvanayagam PFirst Published Jul 19, 2019, 11:17 PM IST
Highlights

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது லீக் ஆட்டம்  இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், ஜெகதீசன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சற்று அதிரடி காட்டிய ஆர்.அஸ்வின் 37 ரன்களில் எம்.அஸ்வின் பந்தில் கேட்ச் ஆனார். அதற்கு பின் விவேக் 4 ரன்னிலும், சதுர்வேத் 21 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 10 ரன்னிலும், முகமது 3 ரன்னிலும், அபினவ் 8 ரன்னிலும், எம்.சிலம்பரசன் 2 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்தது. கடைசியில் ரோஹித்  8 ரன்னுடனும், கவுசிக்  1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர் 3 விக்கெட்டுகளும், எம்.அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜி.பெரியசாமி, சித்தார்த், டி.ராகுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுசிக் காந்தி மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன் எதுவும் எடுக்காமலும், கோபிநாத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த ஆரிப் 16 ரன்னிலும், சசிதேவ் 13 ரன்னிலும், எம்.அஸ்வின் 16 ரன்னிலும், சித்தார்த் 12 ரன்னிலும், டி.ராகுல் 4 ரன்னிலும், ஹரிஸ் குமார் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசியில் ஜி.பெரியசாமி  7 ரன்னுடனும், அலெக்சாண்டர்  10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், கவுசிக் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் , அபினவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

click me!