ரிஷப் பண்ட் மட்டுமே ஆளு இல்ல.. இன்னும் 2 பேரு இருக்காங்க

By karthikeyan VFirst Published Jul 19, 2019, 3:12 PM IST
Highlights

தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பிங்கில் பிராதன ஆப்சன் ரிஷப் பண்ட் தான். ஆனால் ரிஷப் பண்ட் மட்டுமே ஆப்சன் கிடையாது. இன்னும் சில சிறந்த வீரர்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றனர். 

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து சிந்தக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்த தகவல் வெளியானது. 

எனவே எப்படியும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பிங்கில் பிராதன ஆப்சன் ரிஷப் பண்ட் தான். ஆனால் ரிஷப் பண்ட் மட்டுமே ஆப்சன் கிடையாது. இன்னும் சில சிறந்த வீரர்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளித்து யார் சிறந்தவரோ அவரை அடுத்த உலக கோப்பையில் ஆடவைப்பதுதான் சிறந்தது. அதைத்தான் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியில் இவர்களுக்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு வீரரை குறைந்தது ஒன்றரை ஆண்டு ஆடவைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த உலக கோப்பையில் ஆடப்போகும் விக்கெட் கீப்பரை முடிவு செய்துவிடலாம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

click me!