உலக கோப்பைகளை ஜெயிச்சதுக்கு தோனி மட்டுமே காரணமே இல்ல.. தோனியைவிட பெரிய கில்லாடி கேப்டன்லாம் இருக்காங்க.. கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 19, 2019, 3:03 PM IST
Highlights

தோனி இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்திருக்கிறார். உலக கோப்பையை வென்று கொடுத்ததால் தோனி தான் சிறந்த கேப்டன் என்ற பார்வை பலருக்கு இருக்கலாம். ஆனால் தோனி தான் மிகச்சிறந்த கேப்டன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைவிட சிறந்த கேப்டன்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

உலக கோப்பைக்கு பிறகு தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி அதுகுறித்து வாய்திறக்காமல் இருந்துவருவதால் அவருக்கு பிசிசிஐ தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. 

தோனி அவராகவே ஓய்வு அறிவிக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இனிமேல் தோனி இந்திய அணியில் ஆடும் லெவனில் இருக்கமாட்டார் என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துவரும் நிலையில், தோனிக்கு அணியில் இடம் இல்லை என்றால், அதை அவரிடம் நேரடியாக தேர்வாளர்கள் தெரிவிக்க வேண்டும் என சேவாக் வலியுறுத்தியுள்ளார். 

தோனி இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை செய்துள்ளார் என்பதற்காக பிசிசிஐ, தோனி விவகாரத்தில் அதிரடி முடிவெடுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது. உலக கோப்பையில் இந்திய அணி தோற்றதை அடுத்து, அடுத்த உலக கோப்பைக்கு அணியை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்புள்ளது. தோனி வழிவிட்டால்தான், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை அடையாளம் காண முடியும். ரிஷப் பண்ட்டுக்குத்தான் வாய்ப்பிருக்கிறது. 

எனினும் தோனி ஒதுங்கினால் அடுத்த உலக கோப்பைக்கு அணியை தயார் செய்யும் பணியை தொடங்க ஏதுவாக இருக்கும். ஆனால் தோனியோ சற்றும் மசியவில்லை. இதுபோன்ற பெரிய வீரர்கள் விஷயத்தில், அவர்களின் ஓய்வு பெரிய விவகாரமாகவே ஆகிவிடுகிறது. சச்சின் டெண்டுல்கர் விஷயத்திலும் இப்படித்தான் நடந்தது. தோனி விஷயத்திலும் அதுதான் நடக்கிறது. 

தோனி இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்திருக்கிறார். உலக கோப்பையை வென்று கொடுத்ததால் தோனி தான் சிறந்த கேப்டன் என்ற பார்வை பலருக்கு இருக்கலாம். ஆனால் தோனி தான் மிகச்சிறந்த கேப்டன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைவிட சிறந்த கேப்டன்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

தோனியின் ஓய்வு குறித்து ஒரு விவாதத்தில் பேசும்போது, காம்பீர் இந்த கருத்தையும் தெரிவித்தார். புள்ளி விவரங்களின் அடிப்படையில் தோனி சிறந்த கேப்டன் என்றால், அதற்காக மற்ற கேப்டன்கள் அவரைவிட தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை. கங்குலி கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாடுகளில் வென்றிருக்கிறது. இப்போது கோலி கேப்டன்சியில் கூட நிறைய வெற்றிகளை பெற்றுவருகிறோம். 2007 மற்றும் 2011ல் முறையே தோனி டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை வென்று கொடுத்தார். ஆனால் உலக கோப்பையை வென்றதற்காக அனைத்து பெருமைகளையும் கேப்டனுக்கே கொண்டு சேர்க்க முடியாது. அதேபோல் தான் தோல்வியடையும்போதும் அவர் மீது மட்டுமே விமர்சனங்களை வைக்க முடியாது. அனில் கும்ப்ளே நீண்டகாலம் கேப்டன்சி செய்யாவிட்டாலும் அவரும் நல்ல கேப்டன் தான். ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் தொடரை வென்றிருக்கிறார். எனவே தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறமுடியாது. அவரைவிட சிறந்த கேப்டன்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று கம்பீர் அதிரடியாக தெரிவித்தார். 
 

click me!