Dinesh Karthik Retirement: ஐபிஎல் தொடரிலிருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு?

By Rsiva kumarFirst Published Mar 7, 2024, 4:35 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். முதலில் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி நடந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடைசியாக டி20 போட்டியில் அறிமுகமானார்.

இதுவரையில் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1025 ரன்களும், 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1752 ரன்களும், 56 டி20 போட்டிகளில் விளையாடி 672 ரன்களும் எடுத்துள்ளார். இதே போன்று கடந்த 2008ஆம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் டெல்லி டேர்விலிஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். பின்னர் 2011 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

அதன் பிறகு 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இதையடுத்து மீண்டும் 2014 ஆம் ஆண்டு டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடினார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.

கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் தான், வரும் 22ஆம் தேதி தொடங்கும் 17ஆவது ஐபிஎல் தொடருக்கு பிறகு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையாக அறிவிப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!