எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? பெங்களூரு தன்னோட கோட்டைனு மீண்டும் நிரூபித்த தல

By karthikeyan VFirst Published Feb 28, 2019, 10:06 AM IST
Highlights

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்தார் தோனி. அந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் தோனியின் மந்தமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. அதுமட்டுமல்லாமல் சுமார் 8 சிங்கிள்களை ஓடாமல் தவிர்த்தார். அதுவும் அந்த போட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் தான் வெற்றி பெற்றது. அந்த வகையில், ஒருவேளை அந்த சிங்கிள்களை ஓடியிருந்தால், அதுவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 190 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் அந்த இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது. 

இந்த போட்டியில் தோனி மீண்டும் அதிரடியாக ஆடி நம்பிக்கையளித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்தார் தோனி. அந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் தோனியின் மந்தமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. அதுமட்டுமல்லாமல் சுமார் 8 சிங்கிள்களை ஓடாமல் தவிர்த்தார். அதுவும் அந்த போட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் தான் வெற்றி பெற்றது. அந்த வகையில், ஒருவேளை அந்த சிங்கிள்களை ஓடியிருந்தால், அதுவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

முதல் போட்டியில் சரியாக ஆடாததால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனால் விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங் ஆட கடினமாக இருந்தது என்பதுதான் உண்மை. அதனால்தான் 127 என்ற எளிய இலக்கை அவர்களை எளிதாக எட்டவிடாமல் இந்திய அணியால் தடுக்க முடிந்தது. 

எனினும் தோனி மீதான விமர்சனங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 40 ரன்களை குவித்தார் தோனி. களமிறங்கியது முதலே அடித்து ஆடினார் தோனி. பெங்களூரு சின்னசாமி மைதானம் தான் தோனி டி20 போட்டிகளில் அதிகமான ஸ்கோர் அடித்திருக்கும் இரண்டாவது மைதானம். பெங்களூரு மைதானத்தில் தோனி சிறப்பாக ஆடுவார் என்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் அபாரமாக ஆடி மீண்டும் அதை நிரூபிப்பார் என்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் என்னோட கோட்டடா!! ஆஸ்திரேலிய அணியை அலறவிடும் தல தோனி

அதேபோலவே நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கடைசி ஓவரில் தோனி அவுட்டாகிவிட்டார். இல்லையென்றால் அரைசதம் அடித்திருப்பார். 

click me!