ஐபிஎல் 2020: பயிற்சியில் பந்துகளை பறக்கவிடும் தல.. வீடியோ

Published : Mar 05, 2020, 02:57 PM IST
ஐபிஎல் 2020: பயிற்சியில் பந்துகளை பறக்கவிடும் தல.. வீடியோ

சுருக்கம்

ஐபிஎல் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.   

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்து 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடாத தோனியை, மீண்டும் களத்தில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். 

3 முறை சாம்பியனான சிஎஸ்கே, அணி,கடந்த சீசனில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது. இந்நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் தீவிரத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. 

ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், தோனி, ரெய்னா, பியூஷ் சாவ்லா, முரளி விஜய் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். வலைப்பயிற்சியில் தோனி பேட்டிங் பயிற்சியின்போது பந்துகளை பறக்கவிட்ட வீடியோவை சிஎஸ்கே அணி, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

சிஎஸ்கே அணி:

தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரெய்னா, டுப்ளெசிஸ், ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், மிட்செல் சாண்ட்னெர், லுங்கி இங்கிடி, சாம் கரன், நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கேஎம் ஆசிஃப், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மோனு குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர், கேதர் ஜாதவ், ஹேசில்வுட், ஹர்பஜன் சிங், கரன் சர்மா.

Also Read - க்ரீஸுல சும்மா நிற்பதற்கு நீ எதற்கு? செக்யூரிட்டியே போதுமே.. யாருப்பா தம்பி ரன் அடிக்கிறது? ரஹானேவை படுமோசமா கேட்ட முன்னாள் வீரர்

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!