#IPL2021 4வது முறையாக கோப்பையை தூக்கணும்.. முதல் அணியாக துபாய் சென்றடைந்த சிஎஸ்கே

By karthikeyan VFirst Published Aug 13, 2021, 10:25 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடக்கவுள்ள நிலையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தது.
 

ஐபிஎல் 14வது சீசன் லீக் சுற்றில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நடக்கவுள்ளன.

இந்நிலையில், முதல் அணியாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய்க்கு சென்றுள்ளது. 14வது சீசனின் முதல் பாதி முடிவில் 7 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, முதல் அணியாக துபாய் சென்றுள்ளது.

இந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணி, விரைவில் பயிற்சியை தொடங்கி, அமீரக கண்டிஷனுக்கு தயாராகும் விதமாக முதல் அணியாக அங்கு சென்றுள்ளது. அந்த அணி வீரர்களான தோனி, ரெய்னா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், அவர்களுக்கு மேட்ச் பிராக்டீஸே இல்லை. 

அதனால் தான் முதல் அணியாக அங்கு சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். தோனி, ரெய்னா ஆகிய சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
 

Touchdown

📍Whistles Kingdom, UAE 🦁💛 pic.twitter.com/z2pkKWtCws

— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL)
click me!