#ENGvsIND பவுலிங்கில் பட்டைய கிளப்பும் சிராஜ்..! ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 2வது டெஸ்ட்டில் இந்தியா ஆதிக்கம்

Published : Aug 13, 2021, 09:01 PM IST
#ENGvsIND பவுலிங்கில் பட்டைய கிளப்பும் சிராஜ்..! ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 2வது டெஸ்ட்டில் இந்தியா ஆதிக்கம்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 2 விக்கெட்டுகளை ஆரம்ப கட்டத்திலேயே வீழ்த்தி அசத்தினார் சிராஜ்  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அமைத்து கொடுத்த அடித்தளம் மற்றும் அதன்பின்னர் கேஎல் ராகுல் ஆடிய பெரிய இன்னிங்ஸ் ஆகியவற்றின் விளைவாக 364 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த ராகுல் 129 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 83 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

கோலி 42 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் சிப்ளி ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 14 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில், சிராஜ் வீசிய 15வது ஓவரில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார் சிப்ளி. அடுத்த பந்திலேயே ஹசீப் ஹமீத் டக் அவுட்டானார். 

23 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரோரி பர்ன்ஸும் ஜோ ரூட்டும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!