ENG vs NZ: வில்லியம்சனை தொடர்ந்து மற்றுமொரு அதிரடி வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்.! நியூசி., அணிக்கு பின்னடைவு

Published : Jun 16, 2022, 05:39 PM IST
ENG vs NZ: வில்லியம்சனை தொடர்ந்து மற்றுமொரு அதிரடி வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்.! நியூசி., அணிக்கு பின்னடைவு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அதிரடி வீரர் டெவான் கான்வேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இந்த தொடரை வென்றுவிட்டது.

கடைசி டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி லீட்ஸில் தொடங்கி நடக்கிறது. அந்த போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ள நிலையில், அந்த அணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதியானதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர் 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை.

இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அதிரடி வீரர் டெவான் கான்வேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 3வது டெஸ்ட் போட்டி தொடங்க ஒரு வாரத்திற்கு மேல் இருப்பதால், அதற்குள்ளாக குவாரண்டினை முடித்துவிட்டு டெவான் கான்வே அணிக்கு திரும்புவார் என நம்பப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!