டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரருக்கு இடம் கிடைக்க சான்ஸே இல்ல..! கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 16, 2022, 5:25 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்காது என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஐபிஎல்லில் சில வீரர்கள் சிறப்பாக ஆடினர். அதன்விளைவாக தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடத்தையும் பிடித்தனர். அப்படியான வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடி பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்து சிறந்த ஃபினிஷராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதன்விளைவாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவருகிறார்.2வது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக அக்ஸர் படேல் இறக்கப்பட்டார். அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

தினேஷ் கார்த்திக் இப்போதிருக்கும் ஃபார்முக்கு அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக உள்ளன. ஆனால், ரோஹித், விராட், சூர்யகுமார், கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் ஆடாத நிலையில், தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இடம்பிடிக்கிறார். இவர்கள் எல்லாம் வந்துவிட்டால் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது; ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத வீரரை அணியில் எடுத்து பிரயோஜனமில்லை என்று கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், டாப் 7 பேட்ஸ்மேன்களில் பந்துவீச தெரிந்த பேட்ஸ்மேன்கள் இருப்பது அவசியம். அக்ஸர் படேலை 7ம் வரிசையில் இறக்குவதெனெறால், நான் தினேஷ் கார்த்திக்கை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கவேமாட்டேன். ரிஷப் பண்ட், தீபக் ஹூடா மாதிரியான வீரர்களைத்தான் தேர்வு செய்வேன். ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டால் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது. ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத வீரரை அணியில் எடுத்து பிரயோஜனமில்லை என்று கம்பீர் கூறியுள்ளார்.
 

click me!