IRE vs IND:இந்திய அணியின் கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா!ஒருவழியா அவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் கிடைச்சுருச்சு

Published : Jun 16, 2022, 04:23 PM IST
IRE vs IND:இந்திய அணியின் கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா!ஒருவழியா அவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் கிடைச்சுருச்சு

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருப்பதுடன், இந்த அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.  

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து  ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடும் நிலையில், அதே சமயத்தில் அயர்லாந்துக்கு எதிராக மற்றொரு இந்திய அணி2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இங்கிலாந்து தொடருக்கான அணியில் முன்னணி வீரர்கள் ஆடுவதால், அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழ்கிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 அணியில் இஷான் கிஷன், ருதுராஜ், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ்மேன்களும், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் ஆகிய ஸ்பின்னர்களும், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி நிறைய ஸ்கோர் செய்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் திரிபாதிக்கு இடம் கிடைக்காதது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் திரிபாதி இடம்பெற்றுள்ளார். அதேபோல அபரிமிதமான திறமைசாலியான சஞ்சு சாம்சனுக்கும் இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!