#ENGvsNZ கான்வே அபார சதம்.. ஹென்ரி நிகோல்ஸ் சிறப்பான ஆட்டம்..! பெரிய ஸ்கோரை நோக்கி நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Jun 3, 2021, 2:31 PM IST
Highlights

கான்வேவின் அபார சதம், ஹென்ரி நிகோல்ஸின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை நோக்கி செல்கிறது.
 

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் கான்வே இணைந்து முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்தனர். லேதம் 23 ரன்களில் இங்கிலாந்து அறிமுக பவுலர் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அனுபவ வீரர் ரோஸ் டெய்லரையும் 14 ரன்னில் ராபின்சன் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கான்வேவுடன், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்ரி நிகோல்ஸ் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார்.

அபாரமாக ஆடிய கான்வே சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி, முதல் நாள் ஆட்ட முடிவில் 136 ரன்களுடன் களத்தில் உள்ளார் கான்வே. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்துள்ளது. கான்வே 240 பந்தில் 136 ரன்களுடனும், நிகோல்ஸ் 149 பந்தில் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2ம் நாள் ஆட்டத்தை களத்தில் நன்றாக செட்டில் ஆகியுள்ள கான்வேவும் நிகோல்ஸும் தொடர்வார்கள் என்பதால், நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை அடிப்பது உறுதி.
 

click me!