#ENGvsNZ டெஸ்ட்: சதத்தை நோக்கி கான்வே.. ஏமாற்றமளித்த வில்லியம்சன்..! அறிமுக போட்டியில் அசத்தும் இங்கி., பவுலர்

Published : Jun 02, 2021, 08:53 PM IST
#ENGvsNZ டெஸ்ட்: சதத்தை நோக்கி கான்வே.. ஏமாற்றமளித்த வில்லியம்சன்..! அறிமுக போட்டியில் அசத்தும் இங்கி., பவுலர்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கான்வே சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார்.  

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் கான்வே இணைந்து முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்தனர். லேதம் 23 ரன்களில் இங்கிலாந்து அறிமுக பவுலர் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அனுபவ வீரர் ரோஸ் டெய்லரையும் 14 ரன்னில் ராபின்சன் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த கான்வே, சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். முதல் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை 52 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்திருந்த நிலையில், டீ பிரேக் முடிந்து 3வது செசனை தொடங்கி ஆடிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்த KKR... பிளேஆஃப் ரேஸில் கொல்கத்தா... அந்த 4வது இடம் யாருக்கு?
Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்