முதல் ஒருநாள் போட்டி: நெதர்லாந்தை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய அயர்லாந்து..!

Published : Jun 02, 2021, 06:20 PM ISTUpdated : Jun 02, 2021, 06:29 PM IST
முதல் ஒருநாள் போட்டி: நெதர்லாந்தை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய அயர்லாந்து..!

சுருக்கம்

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியை 195 ரன்களுக்கு சுருட்டியது அயர்லாந்து அணி.  

அயர்லாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டே இருந்ததால், நெதர்லாந்து அணியின் ரன் வேகம் அதிகரிக்கவேயில்லை. அந்த அணியின் டெயிலெண்டர் டிம் வாண்டெர் கக்டென் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார்.

அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 50 ஓவர்கள் முழுமையாக ஆடியும் நெதர்லாந்து அணி வெறும் 195 ரன்கள் மட்டுமே அடித்தது. அயர்லாந்து அணி சார்பில் க்ரைக் யங் மற்றும் ஜோஷுவா லிட்டில் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 196 ரன்கள் என்ற எளிய இலக்கை அயர்லாந்து அணி விரட்டிவருகிறது. இந்த இலக்கை அடித்து அயர்லாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!